/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர்; அடிக்கடி நுழையும் கால்நடைகள்
/
பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர்; அடிக்கடி நுழையும் கால்நடைகள்
பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர்; அடிக்கடி நுழையும் கால்நடைகள்
பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர்; அடிக்கடி நுழையும் கால்நடைகள்
ADDED : அக் 17, 2024 10:05 PM

கூடலுார் : கூடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளதால், பள்ளி வளாகத்தில் கால்நடைகள் முகாமிட்டு வருகின்றன.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தினுள் கால்நடைகள், வெளி நபர்கள் நுழைவதை தடுக்க பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.
அம்மா உணவகம் எதிரே, பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்து சீரமைக்கபடாமல் உள்ளது. இதன் வழியாக ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள், பள்ளி வளாகத்தில் நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. இவ்வழியாக, சமூக விரோதிகள், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் நுழையவும் வாய்ப்பு உள்ளது.
பெற்றோர் கூறுகையில்,'இதனை தடுக்கும் வகையில், சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.