/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றை ஒட்டி சேதமடைந்த தடுப்பு சுவர்; சாலை துண்டிக்கும் அபாயம்
/
ஆற்றை ஒட்டி சேதமடைந்த தடுப்பு சுவர்; சாலை துண்டிக்கும் அபாயம்
ஆற்றை ஒட்டி சேதமடைந்த தடுப்பு சுவர்; சாலை துண்டிக்கும் அபாயம்
ஆற்றை ஒட்டி சேதமடைந்த தடுப்பு சுவர்; சாலை துண்டிக்கும் அபாயம்
ADDED : அக் 13, 2024 10:00 PM

கூடலுார் : கூடலுார் காலம்புழா ஆற்றை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்காததால் சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.
கூடலுார், புறமனவயல் தேவர்சோலை சாலை இப்பகுதி மக்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவமழையின் போது புறமனவயல் சாலையை ஒட்டி அமைந்துள்ள தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால், இச்சாலையில் சிறிய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதுவரை அப்பகுதி சீரமைக்கவில்லை. தற்போது, பெய்து வரும் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதி தொடர்ந்து சேதமடைந்து வருகிறது.
இதனால், சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.