/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் சேதமடைந்த சாலை; சீரமைக்க கோரி போராட்டம்
/
எல்லையில் சேதமடைந்த சாலை; சீரமைக்க கோரி போராட்டம்
ADDED : நவ 06, 2024 09:35 PM

கூடலுார் ; தமிழக-கேரள எல்லையான, கூடலுார் அருகே நாடுகாணியில் வருவாய் துறை சார்பில், நுழைவு வரி மையம் அமைத்து, கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
ஆனால், கீழ்நாடுகாணி முதல், தமிழக- கேரள எல்லைவரை சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நாடுகாணியில், மா.கம்யூ., சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு பந்தலுார் ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வாசு போராட்டத்தை துவக்கி வைத்தார்.
அதில், மாநில அரசையும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும்; சாலையை உடனடியாக தரமாக சீரமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
மாவட்ட குழு உறுப்பினர்கள் வர்கீஸ், மணிகண்டன், குஞ்சுமுகமது, பாபு உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.