/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலை: தற்காலிகமாக சீரமைப்பு; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த சாலை: தற்காலிகமாக சீரமைப்பு; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
சேதமடைந்த சாலை: தற்காலிகமாக சீரமைப்பு; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
சேதமடைந்த சாலை: தற்காலிகமாக சீரமைப்பு; நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
ADDED : நவ 14, 2024 09:02 PM

கூடலுார்; கூடலுாரில் சேதமடைந்த கோழிக்கோடு சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.
கூடலுார், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. அதில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பிரிந்து செல்லும் கோழிக்கோடு சாலையில், செம்பாலா வரை, 2 கி.மீ., துாரம் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோன்று, நாடுகாணி முதல் தமிழக- கேரள எல்லையான, கீழ் நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது.
மேலும், செம்பாலா முதல் நாடுகாணி வரை இச்சாலையின் இரு புறங்களும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மக்கள் நடந்து செல்ல வழி இன்றியும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்கிறது.
மேலும், கேரளாவிலிருந்து, கீழ்நாடுகாணி வழியாக, நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணியில் வருவாய் துறை சார்பில் வாகன நுழைவு வரை வசூல் செய்யப்படுகிறது. எனினும், இச்சாலை பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், உள்ளூர் மக்களும், ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இச்சாலையில் சேதமடைந்த பகுதிகளில், ஜல்லி கற்கள் கொட்டி, தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நிரந்தரமாக சீரமைக்க வே்ணடும் என ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசு நிதி ஒதுக்கி, இப்பகுதி சாலையை சீரமைத்தாலும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. சேதமடையும் சாலையும், சாலை ஓரங்களில் வளரும் முட்புதர்களை அவ்வப்போது சீரமைத்தால் வாகன இயக்கத்தில் சிக்கல் இருக்காது.
மேலும், ஒவ்வொரு முறையும் தற்காலிக பணிகளை செய்யாமல், நிரந்தர சீரமைப்பு பணிகளை செய்தால் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்,' என்றனர்.