/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலையோர தடுப்பு சுவர்; நிரந்தரமாக சீரமைத்தால் பயன்
/
சேதமடைந்த சாலையோர தடுப்பு சுவர்; நிரந்தரமாக சீரமைத்தால் பயன்
சேதமடைந்த சாலையோர தடுப்பு சுவர்; நிரந்தரமாக சீரமைத்தால் பயன்
சேதமடைந்த சாலையோர தடுப்பு சுவர்; நிரந்தரமாக சீரமைத்தால் பயன்
ADDED : செப் 30, 2024 10:57 PM

கூடலுார் : 'கூடலுார் தேவாலா கைதகொல்லி அருகே, சேதமடைந்த சாலையோர தடுப்பு சுவரை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார், தேவாலா பகுதியில் கடந்த மே மாதம், 17ம் தேதி பலத்த கோடை மழை பெய்தது. தொடர்ந்து, கைதகொல்லி வழியாக செல்லும் நீரோடையில் மழை வெள்ளம் ஏற்பட்டது. அதில், கைதொல்லி அருகே, கோழிக்கோடு சாலை பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் விழுந்து சேதமடைந்தது.
அதனை ஒட்டிய சாலையோரமும் வெடிப்பு ஏற்பட்டது. சேதமடைந்த சாலையோரம் மண் அரிப்பும் ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், அப்பகுதியில் மண் மூட்டைகள் அடுக்கி, தற்காலிகமாக சீரமைத்தனர்.
தொடர்ந்து, பருவ மழை பெய்ததால், கைதகொல்லி ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த அப்பகுதி நிரந்தரமாக சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.