/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நிழல் குடை; பொது மக்கள் அதிருப்தி
/
சேதமடைந்த நிழல் குடை; பொது மக்கள் அதிருப்தி
ADDED : நவ 28, 2024 11:41 PM

கூடலுார்; கூடலுார் சில்வர் கிளவுட் அருகே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாகன மோதி சேதமடைந்த நிழல்குடை சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேல் கூடலுார், சில்வர் கிளவுட் பகுதியில மக்கள் காத்திருந்து பஸ் ஏறி செல்ல, வசதியாக சில்வர் கிளவுட் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி கூடலுார் நகராட்சி சார்பில் நிழல் குடை அமைத்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஊட்டியில் இருந்து வந்த வாகனம் மோதி நிழல்குடையின் ஒரு பகுதி சேதமடைந்தது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அதனை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்க இல்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள நிழல்குடை இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனம் மோதி நிழல்குடை சேதம் அடைந்தது. இதுவரை சீரமைக்கவில்லை. இதனால், மழை காலங்களில் திறந்த வெளியில் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, சேதமடைந்த நிழல்குடையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.