/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நடைபாதை; தடுமாறும் பயணம்
/
சேதமடைந்த நடைபாதை; தடுமாறும் பயணம்
ADDED : டிச 20, 2024 10:27 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா போக்கர் காலனி செல்லும் நடைபாதை சேதமடைந்து காணப்படுவதால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேவாலா போக்கர் காலனி அமைந்துள்ளது.
இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளன. தேவாலா -கரியசோலை செல்லும் சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்லும் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை முழுமையாக பெயர்ந்து, நடந்து செல்லவே முடியாத நிலையில் வயோதிகர்கள் மற்றும் இரவு நேரத்தில் நடந்து செல்லும் மக்கள் ,நிலை தடுமாறி விழுந்து பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே, இந்த சாலை முழுமையாக காணாமல் போகும் முன்னர், நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டியது அவசியம்.

