/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊசிமலையில் சேதமடைந்த கழிப்பிடம்: சீரமைத்தால் பயன்
/
ஊசிமலையில் சேதமடைந்த கழிப்பிடம்: சீரமைத்தால் பயன்
ADDED : மே 11, 2025 11:40 PM

கூடலுார்; 'கூடலுார் ஊசிமலை காட்சி முனையில், சேதமடைந்துள்ள கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சி முனை அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இங்கு சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில், ஐந்து கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பபகுதிக்கு வந்த காட்டு யானை இரண்டு கழிப்பிடத்தை சேதப்படுத்தியதால், அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சேதமடைந்த கழிப்பிடங்களை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், 'இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த, போதிய கழிப்பிட வசதி இன்றி சிரமம் ஏற்படுகிறது. எனவே, அவைகளை சீரமைப்பதுடன், கூடுதலாக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும்,' என்றனர்.