/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழு கொள்ளளவில் தண்ணீர் ததும்பும் அணைகளால் தடையில்லா மின் உற்பத்தி! உபரி நீர் வெளியேறுவதால் பவானி விவசாயிகளுக்கு பயன்
/
முழு கொள்ளளவில் தண்ணீர் ததும்பும் அணைகளால் தடையில்லா மின் உற்பத்தி! உபரி நீர் வெளியேறுவதால் பவானி விவசாயிகளுக்கு பயன்
முழு கொள்ளளவில் தண்ணீர் ததும்பும் அணைகளால் தடையில்லா மின் உற்பத்தி! உபரி நீர் வெளியேறுவதால் பவானி விவசாயிகளுக்கு பயன்
முழு கொள்ளளவில் தண்ணீர் ததும்பும் அணைகளால் தடையில்லா மின் உற்பத்தி! உபரி நீர் வெளியேறுவதால் பவானி விவசாயிகளுக்கு பயன்
ADDED : ஜூலை 06, 2025 10:48 PM

ஊட்டி: மலையில் தொடரும் மழையால் அணைகள் முழு கொள்ளளவில் நீர் ததும்பி காணப்படுவதால், மின் உற்பத்தி தடையின்றி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குந்தா, பைக்காரா, மின்வட்டத்தில் உள்ள, 12 மின் நிலையங்கள் வாயிலாக, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் உள்ள மையப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பிற இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
தேவைக்கேற்ப நீர் இருப்பு
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. நீரோடைகளில் வினாடிக்கு, 400 முதல் 500 கன அடி வரை நீர் வரத்து அதிகரித்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள, 'அப்பர் பவானி அணையில், 210 அடிக்கு, 180; அவலாஞ்சியில், 171க்கு 165; எமரால்டு, 184 க்கு 160; குந்தா, 89க்கு 87; கெத்தை, 154க்கு 150; பில்லுார், 100க்கு 95 அடி,' வரை தண்ணீர் இருப்பில் உள்ளது. அதில், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட அணைகளில், நீர் ததும்பி காணப்படுகிறது.
அதேபோல், பைக்காரா நீர் மின் திட்டத்திற்கு உட்பட அணைகளிலும் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பில் உள்ளது.
பில்லுார் மற்றும் குன்னுார் நகராட்சி, பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், ராணுவ முகாம் மற்றும் முள்ளிகூர், இத்தலார், நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளின் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இங்குள்ள மின் வட்டத்தில், 12 மின் நிலையங்களில், 32 பிரிவுகள் உள்ளன. 13 அணைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் பரவலாக பெய்த மழையால் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பில் உள்ளது.
833.65 மெகாவாட் மின் திறனில், தற்போதைய நிலவரப்படி, 650 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவே தற்போதைய நிலவரப்படி போதுமானதாக உள்ளது. நடப்பாண்டு இறுதி வரை மின் உற்பத்தியை சமாளிக்க முடியும். மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் உபரி நீர் பவானி பகுதி விவசாயிகளுக்கு பயன்படுகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் பயன்படுகிறது,' என்றனர்.