தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணியில் 80 மி.மீ. மழை: மெல்ல உயர்கிறது நீர் மட்டம்

சிறுவாணியில் 80 மி.மீ. மழை: மெல்ல உயர்கிறது நீர் மட்டம்

சிறுவாணியில் 80 மி.மீ. மழை: மெல்ல உயர்கிறது நீர் மட்டம்


UPDATED : ஜூன் 09, 2026 09:18 PM

ADDED : ஜூன் 09, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 09:18 PM ADDED : ஜூன் 09, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கியிருக்கிறது. சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மே 30 முதல் மழை காணப்படுகிறது.

காலை 8 மணி நிலவரப்படி அணை பகுதியில் 80 மி.மீ. அடிவாரத்தில் 31 மி.மீ. பதிவானது. நீர் மட்டம் 9.81 அடியாக (மொத்த உயரம் 50 அடி) உயர்ந்திருக்கிறது.

பருவ மழை பெய்யத் துவங்குவதற்கு முன், 7.50 அடியாக நீர் மட்டம் குறைந்திருந்தது. ஒரு வாரமாக தினமும் பெய்து வரும் மழையால் மெல்ல மெல்ல நீர் மட்டம் உயர்கிறது. குடிநீர் தேவைக்காக 4.47 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு:

சின்கோனா - 94, சின்னக்கல்லார் - 124, வால்பாறை - 43, சோலையார் - 78, போத்தனுார் - 4.80, வாரப்பட்டி - 4 கிணத்துக்கடவு - 3, தொண்டாமுத்துார் - 2 மி.மீ. பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us