ADDED : ஜூன் 20, 2026 03:51 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: -: கூடலுார் சாலையோரங்களில் காணப்படும் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலுார்- ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை; தேவர்சோலை, கோழிக்கோடு சாலையோரங்களில் உள்ள ஆபத்தான மரங்களால் வாகன விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும், மக்கள் நடக்கும் போது பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில்,'கூடலுார் பகுதி சாலையோரங்களில் ஆபத்தான மரங்கள் என்ற பெயரில் சிலர் விலை உயர்ந்த மரங்களை தேவையின்றி அடையாளப்படுத்தி வெட்டி கடத்தியுள்ளனர். இதனை தடுக்க, வனத்துறை உள்ளிட்ட முக்கிய அரசு துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, ஆபத்தான மரங்களை மட்டும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என் றனர்.
