/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள், சகோதரியுடன் கைது
/
நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள், சகோதரியுடன் கைது
ADDED : மே 18, 2025 10:49 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதி யில், நகைக்காக மாமியாரை அடித்து கொலை செய்த மருமகள் மற்றும் அவரின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை வீரப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது; தனியார் பள்ளி காவலர்.
தன் மனைவி மைமூனாவுடன் வசித்து வந்தார். கடந்த 16ம் தேதி வீட்டின் சமையல் அறையில், அவரது மனைவி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது:
பந்தலுார் அருகே குடியிருக்கும் மைமூனாவின் மகன் சர்புதீனின் மனைவியான கைருனிஷா; தேவர்சோலை கொட்டாய்மேடு பகுதியில் குடியிருந்து வரும் அவரின் தங்கை அஷீனா ஆகியோர், மைமூனாவை கொலை செய்தது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் உள்ள அஷீனாவின் கணவன் நஜிமுதீனை ஜாமின் எடுப்பதற்கு பணம் இல்லாத நிலையில், மைமூனாவின் கழுத்தை நெரித்து, குக்கர் மூடியால் தலையில் இருவரும் தாக்கி கொன்றனர்.
பின், மைமூனா அணிந்திருந்த, 6- சவரன் நகைகள் மற்றும் அவரின் மொபைல் போனை எடுத்து தப்பினர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.