/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் விடிய விடிய மழை: அதிகபட்சம் கெத்தையில் 10 செ.மீ., மழைப்பதிவு
/
நீலகிரியில் விடிய விடிய மழை: அதிகபட்சம் கெத்தையில் 10 செ.மீ., மழைப்பதிவு
நீலகிரியில் விடிய விடிய மழை: அதிகபட்சம் கெத்தையில் 10 செ.மீ., மழைப்பதிவு
நீலகிரியில் விடிய விடிய மழை: அதிகபட்சம் கெத்தையில் 10 செ.மீ., மழைப்பதிவு
ADDED : மே 23, 2024 11:12 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்றிரவு (மே22) முதல் விடிய விடிய மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவின் தெற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று, நாளையும் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இன்று, காலை, 8:30 மணி நிலவரப்படி,
அதிகபட்சமாக,கெத்தை, 10 செ.மீ., கோடநாடு, 11 செ.மீ., குந்தா, 9 செ.மீ., குன்னுார், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. தவிர, பெரும்பாலான பகுதிகளில், 5 செ.மீ., மேல் மழை பெய்துள்ளது.
கன மழைக்கு மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலை, கோரகுந்தா, அப்பர்பவானி சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதிப்பு இருந்தால் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு
மழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குந்தா, கெத்தை, அவலாஞ்சி , எமரால்டு அணைகளுக்கு வினாடிக்கு 100 முதல் 150 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அப்பர்பவானி பைக்காரா, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

