/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தோட்டத்தில் பெண் யானை இறப்பு
/
தனியார் தோட்டத்தில் பெண் யானை இறப்பு
ADDED : ஜன 18, 2024 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை உட்பிரேயர் அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில், காட்டு யானை இறந்து கிடப்பதை நேற்று முன்தினம் மாலை, எஸ்டேட் ஊழியர்கள் பார்த்தனர்; வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று யானை உடலை ஆய்வு செய்தனர். பின், கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு 8 வயது இருக்கும். அதன் உடலில் உள் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக அதன் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு கிடைத்த பின் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்' என்றனர்.