/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர்வீழ்ச்சியில் தொடரும் உயிர் பலி; கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்
/
நீர்வீழ்ச்சியில் தொடரும் உயிர் பலி; கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்
நீர்வீழ்ச்சியில் தொடரும் உயிர் பலி; கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்
நீர்வீழ்ச்சியில் தொடரும் உயிர் பலி; கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்
ADDED : ஏப் 03, 2025 11:20 PM

கோத்தகிரி; கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சியில், உயிர் பலிகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது அவசர, அவசியமாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், பல பகுதிகளில் சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களை, ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுக்களித்து செல்கின்றனர். அதில், கோத்தகிரி பகுதியில், கோடநாடு காட்சிமுனை, கேத்ரீன் நீர்வீழ்ச்சி மற்றும் நேரு பூங்கா ஆகியவை முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன.
இந்நிலையில், சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறாத, கோத்தகிரி-கூக்கல்தொரை இடையே, முதல் கலெக்டர் அலுவலகமான, ஜான் சல்லிவன் நினைவகம் அருகே, உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, ரம்மியமாக காட்சியளிப்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க அதிளவில் வருகின்றனர்.
நீர்வீழ்ச்சி அருகே செல்வதற்கும், அங்கு குளிப்பதற்கும் வனத்துறை தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இந்த தடையை மீறி உள்ளூர் மக்கள், குறிப்பாக, சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி இளைஞர்கள் அங்கு குளிப்பதற்கு செல்கின்றனர்.
ஒரு சிலர் மது அருந்தி, பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், பாசிப்படர்ந்த பாறையில் இறங்கி குளிப்பதால், வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி கடந்த காலங்களில் பல சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் சீகொலா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபர் இப்பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. தற்போது, அவ்வப்போது மழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருகிறது அதிகரித்துள்ளது. சில நாட்களில், கோடை விடுமுறை வர உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள், மாணவர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், இப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது அவசியம். எதிர்காலத்தில் உயிர் பலிகள் தொடராமல் இருக்க, நீர்வீழ்ச்சி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு முள்வேலி அமைக் வேண்டும்,' என்றனர்.

