/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாய அமைச்சகத்தின் கீழ் தேயிலையை கொண்டு வர தீர்மானம்
/
விவசாய அமைச்சகத்தின் கீழ் தேயிலையை கொண்டு வர தீர்மானம்
விவசாய அமைச்சகத்தின் கீழ் தேயிலையை கொண்டு வர தீர்மானம்
விவசாய அமைச்சகத்தின் கீழ் தேயிலையை கொண்டு வர தீர்மானம்
ADDED : ஜூன் 24, 2025 09:49 PM
ஊட்டி; 'பசுந்தேயிலையை விவசாய அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீலகிரி தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்கள் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்ததின் பேரில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதம் கிடைக்காத நிலையில், மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் ஊட்டி அருகே தங்காடு கிராமத்தில் நடந்தது.
ஆரி கவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை மோகன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,'தேயிலை துாள் ஏல மையத்தில் குறைந்தபட்ச ஏலத்தொகையாக, 200 ரூபாய் ஏலத்தொகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட நஷ்ட தொகை, 90 கோடி ரூபாயை அரசு ரத்து செய்ய வேண்டும்.
பசுந்தேயிலை சாகுபடியை விவசாய அமைச்சகத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு நடத்தும் மாபெரும் போராட்டத்தை ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் தலைமையில் நடத்த வேண்டும்,' என்பன, உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.