/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி போராட்டம் நடத்த முடிவு
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி போராட்டம் நடத்த முடிவு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி போராட்டம் நடத்த முடிவு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி போராட்டம் நடத்த முடிவு
ADDED : டிச 09, 2024 09:38 PM
கூடலுார்; கூடலுாரில் சேதமடைமடைந்த சாலை; நடைபாதை சீரமைக்க வலியுறுத்தி, 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடலுார் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வியாபாரி சங்க தலைவர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் இடையே, தோண்டப்பட்டு கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை உடனடியாக சீரமைக்க வேண்டும்; நகரில் சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தி வரும் நெடுஞ்சாலை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கம், வாகன ஓட்டுனர் உரிமையாளர் சங்கம், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் சார்பில், 12ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் தாமஸ், மாவட்ட கூடுதல் செயலாளர் பாதுஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

