/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு; நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

ADDED : அக் 18, 2024 10:11 PM
ஊட்டி : ஊட்டி நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர கடைகளை முறைப்படுத்தி வாடகை வசூலிக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ஆவின் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 32 ஆவின் கடைகள் உட்பட நகரில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறு இன்றி வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் ஏதேனும் இருந்தால், அவைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.