ADDED : ஜன 12, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாலைகளில் பழைய வாகனங்கள், பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, டி.டி.கே., சாலை, கான்வென்ட் சாலை, மவுன்ட் ரோடு உட்பட பல இடங்களிலும் பராமரிப்பு இல்லாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இவற்றை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''சாலையோரங்களில் ஆங்காங்கே பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சியின் சார்பில் அகற்றி, நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்,'' என்றார்.