/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளைய தலைமுறைக்கு பயிற்சி அளிக்க முடிவு
/
இளைய தலைமுறைக்கு பயிற்சி அளிக்க முடிவு
ADDED : டிச 09, 2024 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுாரில் ஜே.சி.ஐ., கிளை துவக்க விழா நடந்தது.
முன்னாள் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் கவுசிக், துணைத் தலைவர் பிரசாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தனர். அதில், புதிய கிளையின் பட்டய தலைவராக மதிவாணன் மற்றும் அவரின் கீழ் ஆட்சி மன்ற குழு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
கூட்டத்தில், 'புதிதாக தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்படும்; இங்குள்ள உறுப்பினர்களுக்கு தனிமனித மேம்பாட்டு பயிற்சி நடத்தப்படும்; பந்தலுார் பகுதியில் திறன் மிக்க இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் உயர்விற்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்கப்படும்,' என, முடிவெடுக்கப்பட்டது.