தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு

தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு

தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு


ADDED : அக் 10, 2025 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்; தென் மாநில அளவில் நடந்த தேயிலை ஏலங்களில், 34.27 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.

குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 40வது ஏலத்தில், '15.63 லட்சம் கிலோ இலை ரகம்; 4.49 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 20.12 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில்,

'13.10 லட்சம் கிலோ இலை ரகம்; 2.82 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 15.92 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 95.89 ரூபாய் என இருந்தது; மொத்த வருமானம், 15.27 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 1.35 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது; விற்பனையில், 27 ஆயிரம் கிலோ குறைந்தது. சராசரி விலையில் சரிவு ஏற்பட்டது. 28 ஆயிரம் ரூபாய் வருவாய் குறைந்தது.

டீசர்வ் ஏல நிலவரம் நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், 'டீசர்வ்' ஏல மைய ஏலத்திற்கு வந்தது.

அதில், 1.52 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.32 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 84.74 ரூபாயாக இருந்தது.

1.11 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 19 ஆயிரம் கிலோ வரத்தும், 3 ஆயிரம் கிலோ விற்பனையும் அதிகரித்தது. கிலோவிற்கு, 2.08 ரூபாய் வீழ்ச்சியடைந்தது.

கோவை ஏல மையத்தில், நடந்த ஏலத்தில், 4.48 லட்சம் கிலோ வந்ததில், 3.69 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 127.90 ரூபாயாக இருந்தது. 4.72 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 52 ஆயிரம் கிலோ வரத்து; 4 ஆயிரம் கிலோ விற்பனை; ஒரு ரூபாய் சராசரி விலை உயர்ந்தது. கொச்சி ஏல மையத்தில், 8.28 லட்சம் கிலோ வந்ததில், 7.87 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை, 167.32 ரூபாய் என இருந்தது. 13.16 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.

கிலோவிற்கு, 76 பைசா உயர்ந்தது. 1.27 லட்சம் கிலோ வரத்து ; 1.25 லட்சம் கிலோ விற்பனை குறைந்தது. தென் மாநில அளவில் நடந்த ஏலத்தில், 34.27 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 2.36 கோடி மொத்த வருவாய் ரூபாய் குறைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us