/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் வினியோக அனுமதி தாமதம்: மக்கள் எதிர்ப்பால் சலசலப்பு
/
மின் வினியோக அனுமதி தாமதம்: மக்கள் எதிர்ப்பால் சலசலப்பு
மின் வினியோக அனுமதி தாமதம்: மக்கள் எதிர்ப்பால் சலசலப்பு
மின் வினியோக அனுமதி தாமதம்: மக்கள் எதிர்ப்பால் சலசலப்பு
ADDED : நவ 02, 2025 10:08 PM
கூடலூர்:  -கூடலூர், முதுமலை ஊராட்சியின் கிராமசபை கூட்டம் முதுகுழி ஊராட்சி  அலுவல வளாகத்தில்  நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த மக்கள், இப்பகுதியில், குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, கட்டப்பட்ட குடிநீர் தொட்டிக்கு, மோட்டார் வாயிலாக தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. சிங்கிள் பேஸ் மின்சாரம் காரணமாக, அடிக்கடி மோட்டார் பழுதாகிறது. இதற்கு தீர்வாக மும்முனை இணைப்பு கேட்டு ஊராட்சி சார்பில்  மின் வாரியத்திற்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை தடையில்லா சான்று வழங்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, கூறி மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க மறுத்தனர்.
கூடலூர் தாசில்தார் முத்துமாரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சலீம், சுப்பரமணி ஆகியோர்  மக்களை சந்தித்து, இரண்டு வாரத்தில், பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.  கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

