/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடக பூங்காவில் பசுமை சூழலால் பரவசம்
/
கர்நாடக பூங்காவில் பசுமை சூழலால் பரவசம்
ADDED : நவ 03, 2024 10:19 PM

ஊட்டி ;ஊட்டி பெர்ன்ஹில் அருகே அமைந்துள்ள கர்நாடகா பூங்காவில், கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர்.
ஊட்டிக்கு பெரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்காவை அடுத்து, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மற்றும் பைகாரா உள்ளிட்ட சுற்றுலா மையங்களை கண்டு களிப்பதுடன், ஊட்டி பெர்ன் ஹில் அருகே அமைந்துள்ள கர்நாடக பூங்காவுக்கு செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
கர்நாடக மாநிலம் தோட்டக்கலைத்துறை, இந்த பூங்காவை சிறப்பாக பராமரித்து வருகிறது. தொடர் மழை காரணமாக, புல்வெளி பசுமைக்கு திரும்பியுள்ள நிலையில், மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதனை பார்வையாளர்கள் கண்டு களித்து குதூகலம் அடைகின்றனர். இந்நிலையில், நேற்று தொடர் மழையிலும்.
குளிருடன் மேகமூட்டமான காலநிலை நிலவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் பூங்காவில் அதிகரித்து காணப்பட்டது.