/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பாரத்' அரிசியை ரேஷன் கடைகளில் வினியோகிக்க கோரிக்கை
/
'பாரத்' அரிசியை ரேஷன் கடைகளில் வினியோகிக்க கோரிக்கை
'பாரத்' அரிசியை ரேஷன் கடைகளில் வினியோகிக்க கோரிக்கை
'பாரத்' அரிசியை ரேஷன் கடைகளில் வினியோகிக்க கோரிக்கை
ADDED : பிப் 20, 2024 06:01 AM
ஊட்டி: 'மத்திய அரசு வழங்கும் பாரத் அரிசியை, அணைத்து ரேஷன் கடைகளிலும், வினியோகிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
ஊட்டி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. துணை பதிவாளர் இம்தியாஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ரேஷன் கடைகளில் அயோடின் கலந்த உப்பு வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்; தேவால மற்றும் பந்தலூர் பகுதியில் செயல்பட்டு வந்த கூட்டுறவு சிறப்பு அங்காடியை மீண்டும் திறக்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் பாரத் அரிசியை அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கும் நாட்களை முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்.

