நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: பந்தலுார் பஜாரில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்து பேசுகையில், ''அமெரிக்கா பிற நாடுகளுடன் போர் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதில், அதிக கனிம வளங்களை கொண்டுள்ள, வெனிசுலா நாட்டை கைப்பற்றும் வகையில், அதன் அதிபர் நிக்கோலஸ், அவரின் மனைவி சிலியாபுளோரசையும் கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
எனவே அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை கட்டுப்படுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் வர்கீஸ், மணிகண்டன், மாறன், சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

