/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அனுபவம் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி': எச். ராஜா கருத்து
/
'அனுபவம் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி': எச். ராஜா கருத்து
'அனுபவம் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி': எச். ராஜா கருத்து
'அனுபவம் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி': எச். ராஜா கருத்து
ADDED : அக் 16, 2024 06:45 AM

ஊட்டி : ''அனுபவம் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது,'' என, பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜா கூறினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மாநில அரசுக்கு மழைநீர் வடிகால் அமைக்க மத்திய அரசால்,4000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 90 சதவீதம் செலவு செய்துள்ளதாக முதலில் கூறிய நிலையில் தற்பொழுது, 40 சதவீதம் செலவு செய்துள்ளதாக கூறுகின்றனர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்பொழுது சென்னையில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
'கவரப்பேட்டை ரயில் விபத்திற்கான காரணம் மனித தவறா; இயந்திர கோளாறா அல்லது நாச வேலையா,' என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி, 'ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது; மத்திய அரசு இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என, கூறி உள்ளார். ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு முன், அது குறித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும். அனுபவம் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2004 முதல் 2014 வரை தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்., ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக, 171 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், 2015 முதல் 23 வரை ரயில் விபத்துகளின் எண்ணிக்கை, 71 ஆக குறைந்துள்ளது.
காங்., ஆட்சியின் போது, 22,000 கி.மீ ரயில் பாதை மின் மயமாக இருந்தது. தற்போது, மொத்தமாக உள்ள, 66,000 கி.மீ., ரயில் பாதையில், 64 ஆயிரம் கி.மீ., மின் மயமாக்கப்பட்டுள்ளது.ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் மற்றும் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் விபத்துகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.