sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 'மெக் ஐவரின்' கல்லறையில் வம்சாவளியினர் அஞ்சலி

/

 'மெக் ஐவரின்' கல்லறையில் வம்சாவளியினர் அஞ்சலி

 'மெக் ஐவரின்' கல்லறையில் வம்சாவளியினர் அஞ்சலி

 'மெக் ஐவரின்' கல்லறையில் வம்சாவளியினர் அஞ்சலி


ADDED : ஜன 24, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய, 'மெக்ஐவரின்' கல்லறையில் அவரது உறவினர்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் கல்லறை, ஊட்டி ஸ்டீபன் சர்ச் தோட்டத்தில் உள்ளது. இந்த கல்லறையை அவரது வம்சாவளியினரான நிக்ரவுசின், அவரது மனைவி கிளேர் மற்றும் உறவினர் கேபே அலெக்ஸ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து, நிக்ரிவுசின் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது மூதாதையர் மெக் ஐவரின் கல்லறை ஊட்டியில் இருப்பது தற்போது தான் எங்களுக்கு தெரியும். மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை அவரது நினைவாக கல்லறையை பாதுகாத்து, பராமரித்து வருவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. மலேரியாவை கட்டுப்படுத்த சின்கோனா தோட்டத்தை பராமரிக்க மெக் ஐவர், ஊட்டிக்கு வந்தார். பிறகு, அவர் தாவரவியல் பூங்காவை உருவாக்கியுள்ளார். மேலும், மெக் ஐவருடன் வந்த எங்களது மூதாதையர்கள், கிளன்மார்கன் எஸ்டேட், தேனி, கேரள மாநிலம், பெரியார் பகுதிகளில் தேயிலை எஸ்டேட்களை உருவாக்கினர்.

எனது தந்தை, எட்டு வயதில் இங்கிலாந்து திரும்பிய நிலையில், தாத்தா, பாட்டி ஆகியோர் கிளன்மார்கனில் இருந்தனர். அலெக்ஸ் எங்களது உறுப்பினர் என சமீபத்தில் தான் தெரியவந்தது. அலெக்ஸ் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக இந்தியா வந்தோம். அப்போதுதான் எங்களது மூதாதையர் மெக் ஐவர் என்பதும், அவரது கல்லறை ஊட்டியில் உள்ளது என தெரியவந்தது. அவரது நினைவிடத்தை கண்டு, நினைவு கூருவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us