/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டால்பின் நோஸ் அருகே தேயிலை தோட்டம் அழிப்பு; பணிகளுக்கு தடைவிதித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்
/
டால்பின் நோஸ் அருகே தேயிலை தோட்டம் அழிப்பு; பணிகளுக்கு தடைவிதித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்
டால்பின் நோஸ் அருகே தேயிலை தோட்டம் அழிப்பு; பணிகளுக்கு தடைவிதித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்
டால்பின் நோஸ் அருகே தேயிலை தோட்டம் அழிப்பு; பணிகளுக்கு தடைவிதித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்
ADDED : டிச 12, 2024 09:43 PM

குன்னுார்; குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனையில் அனுமதியின்றி வியாபார பயன்பாட்டிற்காக தேயிலை தோட்டம் அழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், 'பார்க்கிங்' கட்டணம் மற்றும் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சில வருவாய் துறையினரின் வாய்மொழி உத்தரவின் கீழ், இரவு நேரத்தில், பொக்லைன் பயன்படுத்தி தேயிலை செடிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து இரும்பு கம்பிகள் அமைத்து வியாபார பயன்பாட்டிற்கான பணிகள் துவங்கப்பட்டது. அப்பகுதி மக்களின் புகாரின் பேரில், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், ஊராட்சி செயலாளர் பிந்து ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், எந்த அனுமதியும் பெறாமல் பணிகள் மேற்கொள்வதாக தெரிய வந்ததை அடுத்து தடை விதிக்கப்பட்டது. அதிகாரிகளின் விசாரணையில், இப்பகுதியில் 'ஜிப்லைன்' அமைக்கவும், பறவை பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொண்டனர்,' என, தெரிய வந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'டால்பின் நோஸ் காட்சி முனையில் அனுமதியின்றி வியாபார பயன்பாட்டிற்காக, தேயிலை தோட்டம் அழிக்கப்பட்டு வருகிறது. தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல்வாதிகள் குழுவாக இணைந்து இது போன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பர்லியார் ஊராட்சியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் இந்த பகுதிகளில் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.