/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு
/
மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு
மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு
மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு
ADDED : பிப் 06, 2024 10:06 PM
ஊட்டி;ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கூக்கல், எப்பநாடு, உயிலட்டி, கக்குச்சி, அஜ்ஜூர் மற்றும் இடுஹட்டி உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன.
சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நடந்துவரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரியில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெற ஆய்வு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த, இரண்டரை ஆண்டுகளில், கூக்கல் ஊராட்சியில், 5.14 கோடி ரூபாய், கக்குச்சி ஊராட்சியில், 13.49 கோடி ரூபாய், எப்பநாடு ஊராட்சியில், 4.43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முடிவுற்ற வளர்ச்சி பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நடந்து வரும் பணிகளை, தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வில், கூடுதல் கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமார், ஆர்.டி.ஓ., மகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

