/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆதிபராசக்தி கோவிலில் ஆண்டு திருவிழா பூ குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்

ADDED : மே 12, 2025 10:47 PM

மஞ்சூர், ; காத்தாடிமட்டம் பரமூலை, சின்கொய்னாத் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், 69 வது ஆண்டு திருவிழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர்.
மஞ்சூர்- ஊட்டி சாலையில், காத்தாடிமட்டம் அருகே, பரமூலை. சின்கொய்னாத் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், 69வது ஆண்டு திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, நையாண்டி மேளத்துடன் கும்பம் எடுத்து வரப்பட்டது. 27 அடி நீளத்தில், ஒன்றரை அடி உயரத்தில் பூ குண்டம் தீ மூட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. 48 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், 60 பேர் ஆற்றில் நீராடி, நேற்று முன்தினம் காலை பூ குண்டம் இறங்கினர்.
இதில், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது.