/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில்களில் தை திருநாள் பண்டிகை கோலாகலம்; பஜனை பாடி பக்தர்கள் உற்சாகம்
/
கோவில்களில் தை திருநாள் பண்டிகை கோலாகலம்; பஜனை பாடி பக்தர்கள் உற்சாகம்
கோவில்களில் தை திருநாள் பண்டிகை கோலாகலம்; பஜனை பாடி பக்தர்கள் உற்சாகம்
கோவில்களில் தை திருநாள் பண்டிகை கோலாகலம்; பஜனை பாடி பக்தர்கள் உற்சாகம்
ADDED : ஜன 15, 2024 10:48 PM

ஊட்டி;மாவட்டத்தில் கோவில்களில் தைத்திருநாள் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஒரு மாதம் மார்கழி மாத வழிபாடு முடிந்து நேற்று, தை மாதம் பிறப்பை ஒட்டி தைத் திருநாள் பண்டிகை கிராம கோவில்களில் விமரிசையாக நடந்தது. மார்கழி மாதம் வழிபாடு நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது.
தைத் திருநாள் நிகழ்ச்சியாக, நேற்று அன்னமலை முருகன் கோவில், மஞ்சூர் மாரியம்மன், ஊட்டி மாரியம்மன், எல்க்ஹில் முருகன் கோவில், குன்னுார் தண்டு மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் குந்தா துானேரி கிராமம், பாக்கோரை, தேனாடு உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராம கோவில்களில் காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.
காலை, 10:30 மணிக்கு, முருகன், நாராயணமூர்த்தி கோவில்களில் பால், தயிர், பன்னீர் உட்பட 12 அபிஷேகங்கள் நடந்தது. கோவில்களில் பஜனை, ஆடல், பாடல் , நடன நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒரு மாதம் மார்கழி விரதம் மேற்கண்ட முருக பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். முருக பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.