ADDED : மார் 10, 2024 10:46 PM

அன்னுார்;குன்னியூர் கருப்பராயன் சுவாமி கோவிலில் அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குன்னியூர் கைகாட்டி அருகே, அருள் வாக்கு கூறுவதில் பிரசித்தி பெற்ற கருப்பராயன் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில், மாசாணி அம்மன், கரியகாளியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. மாலையில் விநாயகர் வழிபாடு, சங்கு அபிஷேகம், கம்பம் நடுதல் நடந்து. நேற்று முன்தினம் மாலை, அக்னி குண்டம் கண் திறத்தலும், அலங்கார பூஜையும், கம்பம் சுற்றி பக்தர்கள் ஆடும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 9:10 மணிக்கு பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். காலை 10:00 மணிக்கு 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வழிபட்டனர். மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, திருவிளையாடல் நிகழ்ச்சி, அருள் வாக்கு கூறுதல் நடந்தது. மதியம் மாசாணி அம்மன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது, குண்டம் திருவிழாவில் அன்னுார், கோவை, திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

