தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் பரவசம்

 மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் பரவசம்

 மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் பரவசம்


ADDED : மார் 22, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர் கிளன்வான்ஸ் மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கூடலூர், ஓவேலி கிளன்வான்ஸ் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் 7ம் ஆண்டு திருவிழா, 20ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு கொடியேற்றுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, பக்தர்கள் கிளன்வான்ஸ் ஆற்றுக்கு சென்று கரகம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு சேரன் நகர் ஆற்றில் இருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் பூட்டியும், பங்கேற்றனர். மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று, காலை முதல் சிறப்பு பூஜைகளும், காலை 10:30 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. மதியம் 3:30 அம்மன் கரக ஊர்வலம் துவங்கியது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us