/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புத்தாண்டை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
புத்தாண்டை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
புத்தாண்டை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
புத்தாண்டை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 02, 2025 12:47 AM

ஊட்டி ;புத்தாண்டை ஒட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நீலகிரியில் ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி நேற்று காலை முதல் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர். ஊட்டியில் பிரசித்தி பெற்ற கோவில்களான மாரியம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் அதிகாலை, 5:00 மணி அளவில் கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி பஜனையை தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சீனிவாச பெருமாளை தரிசித்தனர்.
அதே வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலும், ஊட்டி மாரியம்மன் கோவிலில் காலை முதல் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், காந்தள் காசி விஸ்வநாதர் கோவில் உட்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
* குன்னுாரில் உள்ள விநாயகர் கோவிலில், ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் அன்னதான பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, 35வது ஆண்டு அன்னதான பெருவிழா நடந்தது விழாவையொட்டி காலை விநாயகர் முருகன், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது; மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை குருசாமி பாஸ்கரன் துவக்கி வைத்தார். குன்னுார் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

