/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகர விளக்கு திருவிழா பக்தர்கள் பங்கேற்பு
/
மகர விளக்கு திருவிழா பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 20, 2025 06:10 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே பெக்கி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மகர விளக்கு திருவிழா நடந்தது.
அதில், நடை திறப்பு, தாந்திரிக பூஜைகள், தீபாராதனை, பிராயசித்த ஹோமம், வாஸ்து பலி, இரவு பூஜை, அன்ன தான நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, திருமஞ்சனம், மலர் நிவேதியம், கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன், சிறப்பு பூஜைகள் மற்றும் தீபம், கை கொட்டிக்களி, செண்டை மேளக்கச்சேரி நடந்தது.
பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி பவனி மற்றும் தாள தட்டு, முத்துக்குடை நிகழ்ச்சிகளும், இசை கச்சேரியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.