/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை -அருளாசி பெற்ற திரளான பக்தர்கள்
/
பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை -அருளாசி பெற்ற திரளான பக்தர்கள்
பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை -அருளாசி பெற்ற திரளான பக்தர்கள்
பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை -அருளாசி பெற்ற திரளான பக்தர்கள்
ADDED : ஆக 24, 2025 11:10 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திக்குன்னா பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அத்திக்குன்னா பகுதியில் பெரியாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினசரி பூஜைகள் நடப்பதுடன், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி நடக்கிறது.
அமாவாசை நாளில் காலை ஆறு மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பட்டு சார்த்துதல், மஞ்சள் மற்றும் குங்குமம் அபிஷேகம் செய்தல், தேங்காய் உடைத்து அருள்வாக்கு கூறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். அதில், பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.