sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 குடற்புழு நீக்க மாத்திரை 1.76 லட்சம் பேருக்கு வினியோகம்

/

 குடற்புழு நீக்க மாத்திரை 1.76 லட்சம் பேருக்கு வினியோகம்

 குடற்புழு நீக்க மாத்திரை 1.76 லட்சம் பேருக்கு வினியோகம்

 குடற்புழு நீக்க மாத்திரை 1.76 லட்சம் பேருக்கு வினியோகம்


ADDED : பிப் 09, 2026 04:55 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: -நீலகிரியில் 1.76 லட்சம் பேருக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வினியோகிக்கப்படுறது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை;

நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் நாளை (10ம்) தேதியும், விடுபட்டவர்களுக்கு 17ம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது. ஒரு வயது முதல், இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி. லி., அல்பென்டசோல் திரவமும், இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல், 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு, ஒரு நபருக்கு, ஒரு மாத்திரை வீதம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலயங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. இதில், 486 அங்கன்வாடி பணியாளர்கள், 216 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 416 ஆஷா பணியாளர்கள் வாயிலாகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் இந்த மாத்திரை வழங்கப்படும்.

இதன் வாயிலாக ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 130 குழந்தைகள், 50 ஆயிரத்து, 456 கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் பயன்பெறுவர். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதனால், குடற்புழு மற்றும் ரத்த சோகை நீங்கி, நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது.

இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us