/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமத்துவ பொங்கல் விழா பணியாளர்களுக்கு வேட்டி சேலை
/
சமத்துவ பொங்கல் விழா பணியாளர்களுக்கு வேட்டி சேலை
ADDED : ஜன 11, 2025 09:53 AM
ஊட்டி : ஊட்டி முள்ளிக்கொரை பகுதியில் செயல்பட்டு வரும், 'அன்பு-அறிவு' ஆதரவற்றோர் இல்லத்தில், மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதி குழு சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவை துவக்கி வைத்த கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி பேசுகையில், ''உழவர்களுக்காக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாளை, எல்லோரும் ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடி வருகிறோம்.
இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோருக்கு மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் உறுதுணையாக இருக்கும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார். இதில், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், நகராட்சி கமிஷனர் உட்பட பங்கேற்றனர்.

