/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'திபோர்போ' கோவில் திருவிழா; தோடரின மக்கள் குதுாகலம்
/
'திபோர்போ' கோவில் திருவிழா; தோடரின மக்கள் குதுாகலம்
'திபோர்போ' கோவில் திருவிழா; தோடரின மக்கள் குதுாகலம்
'திபோர்போ' கோவில் திருவிழா; தோடரின மக்கள் குதுாகலம்
ADDED : ஏப் 04, 2025 10:47 PM

ஊட்டி; ஊட்டி கிளன்மார்கன் பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் தார்நாடு மந்து அமைந்துள்ளது.
இந்த மந்து பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், 'திபோர்போ' எனப்படும் அரைவட்ட வடிவில், மூங்கில் மற்றும் அவல் புற்களால் கோவில் கட்டி காலம், காலமாக வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த கோவில் கடந்த, 12 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தார்நாடு மந்து பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின ஆண்கள் அனைவரும் விரதம் இருந்து, அப்பர் பவானி, கோரகுந்தா மற்றும் மசினகுடி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து, அவல் புற்கள், மூங்கில் பிரம்புகளை சேகரித்து வந்தனர்.
கடந்த ஒரு மாதம் காலமாக, கோவிலை புரைமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். பணிகள் முழுமை பெற்ற நிலையில், நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 64 மந்துக்களை சேர்ந்த தோடர் பழங்குடியின ஆண்கள், பாரம்பரிய உடையுடன் விழாவில் பங்கேற்றனர்.
மழை பெய்த நிலையிலும், மழையில் நனைந்தப்படி, 'குலம் செழிக்கவும், தங்களது வளர்ப்பு எருமைகளின் எண்ணிக்கை பெருகவும், உலக மக்கள் நோயின்றி வாழ வேண்டும்,' என, காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அனைவரும் ஒன்று கூடி ஒருவருக்கு, ஒருவர் கைகளை கோர்த்தவாறு, பாரம்பரிய பாடலுடன், விவசாயம் செழிக்க நடனமாடிமகிழ்ந்தனர்.