தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழுதுபார்ப்பு பணிக்கு சென்ற டீசல் இன்ஜின் மீண்டும் இயக்கம்

 பழுதுபார்ப்பு பணிக்கு சென்ற டீசல் இன்ஜின் மீண்டும் இயக்கம்

 பழுதுபார்ப்பு பணிக்கு சென்ற டீசல் இன்ஜின் மீண்டும் இயக்கம்


ADDED : ஏப் 20, 2026 05:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 05:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் டீசல் இன்ஜினில் பழுது பணிகள் முடிந்து குன்னுாருக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்பட்டது.

குன்னுார்- ஊட்டி இடையே டீசல் இன்ஜின்கள் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பழுது பார்ப்பு பணிக்காக திருச்சி பொன்மலை பணிமனைக்கு டீசல் இன்ஜின் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டது.

பழுதுபார்க்கப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வந்த இந்த இன்ஜின் இரு பெட்டிகளின் நடுவே இணைத்து, குன்னுாருக்கு கொண்டுவரப்பட்டது. இந்த இன்ஜினில் சோதனை ஓட்டம் நடத்திய பின், தற்போது, ஊட்டி- குன்னுார் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us