ADDED : செப் 22, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: அருவங்காடு ஜெகதளா சாலையில் திடீரென சேறு கலந்த நீர் சென்றதுடன, துர்நாற்றமும் வீசியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் அருகே ஜெகதளா சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான குடிநீர் தொட்டியிலிருந்து நேற்று காலை, 8:40 மணி முதல் 9:00 மணி வரை திடீரென பெருமளவில் தண்ணீர் வெளியேறி சாலையில் பாய்ந்தது.
காலையில் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மற்றும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்ததும் தொழிற்சாலை பணியாளர்கள் விரைந்து வந்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஏற்கனவே இந்த சாலை நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சேறும், சகதியும் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
