UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:24 PM

கூடலுார்: மேல் கூடலுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, கூடலுார் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அரசு மற்றும் வார விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், கூடலுார் நகரம் மற்றும் மேல் கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஓட்டுனர் முருகதாஸ் கூறுகையில்,''சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உலா வரும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. சாலையில் கால்நடைகள் உலா வருவதை தடுப்பதுடன், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
