/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெரும்பள்ளம் - முள்ளி இடையே புதர் சூழ்ந்த சாலை வளைவுகளில் வாகனங்களை இயக்குவதில் சிக்கல்

ADDED : நவ 20, 2024 09:56 PM

மஞ்சூர்; பெரும் பள்ளம் சாலையில் இருபுறம் புதர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் வளைவுகளில் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மஞ்சூரிலிருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு வழியாக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு அரசு பஸ் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் சென்று வருகிறது. தவிர, இந்த வழித்தடத்தில் கேரளா சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.
மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் சாலை உள்ளது. சாலையின் இருபுறமும் காட்டு செடிகள் ஓங்கி வளர்ந்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புதர்கள் சூழ்ந்திருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்பள்ளத்திலிருந்து முள்ளி வரை வளர்ந்துள்ள புதர் செடிகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனத்தை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீலகிரி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, மஞ்சூர் முதல் பெரும்பள்ளம் பகுதி வரை சாலையில் இருபுறம் வளர்ந்துள்ள புதர்கள் அகற்றப்பட்டது.
பெரும்பள்ளம் முதல் முள்ளி வரை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அச்சாலையில் புதர்கள் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டி உள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.