/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பணி டெண்டர் விடுவதில் சிக்கல்; ஒப்பந்ததாரர்கள் திடீர் போராட்டம்
/
பணி டெண்டர் விடுவதில் சிக்கல்; ஒப்பந்ததாரர்கள் திடீர் போராட்டம்
பணி டெண்டர் விடுவதில் சிக்கல்; ஒப்பந்ததாரர்கள் திடீர் போராட்டம்
பணி டெண்டர் விடுவதில் சிக்கல்; ஒப்பந்ததாரர்கள் திடீர் போராட்டம்
ADDED : மார் 09, 2024 07:20 AM

பந்தலுார் : பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியில் சாலை சீரமைப்பில், 52 பணிகள் மேற்கொள்ள, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள், தங்கள் ஒப்பந்த புள்ளிகளை ஒப்பந்தப் புள்ளி பெட்டியில் போட்டனர்.
நேற்றைய பிற்பகல், 3:00 மணிக்கு பெட்டி திறக்கப்பட்டு, டெண்டர் விடப்பட வேண்டிய நிலையில், நகராட்சி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர், பிற்பகல், 2:45 மணிக்கு ஒப்பந்தப்புள்ளி பெட்டியை மூடினர். இதனால் கடைசி நேரத்தில் ஒப்பந்த புள்ளி பெட்டியில், தங்கள் ஒப்பந்த புள்ளிகளை போட முடியாமல் பலர் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர்கள் நகராட்சி பொறியாளர் சாந்தியிடம் கேட்டபோது, 'இது மேல் இடத்து உத்தரவு; என்னால் எதுவும் செய்ய முடியாது,' என கூறி வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியத்திடம் கேட்ட போது, 'இது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஒப்பந்ததாரர்களால், தற்கொலை செய்து கொல்வேன்,' எனக்கூறி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறுகையில், 'நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்வருக்கு மனு அனுப்ப உள்ளோம்,' என்றனர்.

