தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடைபாதையில் மண் நடந்து செல்வதில் சிரமம்

 நடைபாதையில் மண் நடந்து செல்வதில் சிரமம்

 நடைபாதையில் மண் நடந்து செல்வதில் சிரமம்


ADDED : நவ 29, 2025 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி தாலுகா அலுவலகம் செல்லும் நடைபாதையில், மண் மற்றும் கற்கள் அகற்றாததால், நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

கோத்தகிரி தாலுகா அலுவலக சாலையில், கோர்ட், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, டெலிபோன் எக்சேஞ்ச் மற்றும் நூலகம் உள்ளிட்ட, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

தவிர, குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த சாலை வழியாக, நகரின் முக்கிய ராம்சந்த் பகுதிக்கு, சென்று வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, தண்ணீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, 'கான்கிரீட்' போட்டு மூடப்பட்டது. ஆனால், மண் மற்றும் கற்கள், அகற்றப்படாமல் நடைபாதையில் உள்ளது. இதனால், மக்கள் நடந்து சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு, சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

செங்குத்தான இந்த குறுகிய சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடைபாதையின் மேல் கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us