ADDED : ஜூலை 11, 2025 11:10 PM
பந்தலுார், ; பந்தலுார் அருகே தேவாலா வாழவயல் கிராமம், நெல்லியாளம் நகராட்சி எல்லையில் அமைந்து உள்ளது.
இந்த பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளதுடன், தேவாலாவிலிருந்து கரியசோலை செல்லும் சாலையும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு, 7:00 மணிக்கு மேல் யானைகள் தினசரி வந்து செல்லும் சூழலில், தெருவிளக்கு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவில் அவசர தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு வரும்போது, இருள் சூழ்ந்த இந்த பகுதியில் வனவிலங்குகள் நின்றால் தெரியாமல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தியும், அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.