/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
/
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED : டிச 15, 2025 06:01 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் வாகனங்களின் மாதாந்திர பராமரிப்பு குறித்து, ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி., சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்ட காவல் துறையினர் பயன்படுத்தும், கார், ஜீப், வேன்கள், அதிரடிப்படை அவசர ஊர்திகள், பைக்குகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட வாகனங்களின் பராமரிப்பு குறித்த ஆய்வு, ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் நடந்தது. அதில், அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
டி.ஐ.ஜி., சசிமோகன், காவல் வாகனங்களில், ஆவணங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின், ஓட்டுனர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சரி செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது எஸ்.பி., நிஷா உட்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

