/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு 'டிஜிட்டல் போர்ட்'
/
அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு 'டிஜிட்டல் போர்ட்'
ADDED : பிப் 21, 2026 04:38 AM

கூடலுார்: கூடலுார் அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு, திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பில் 'டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட்' உள்ளிட்ட, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மற்றும் வடகொல்லி ஊராட்சி பள்ளிக்கு பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில், திருப்பூர் முருகன் பூண்டி ரோட்டரி கிளப் சார்பில், 'ஸ்மார்ட் எஜுகேஷன் இனிஷியேட்டியூ -2026' திட்டத்தின் கீழ், இரு பள்ளிகளுக்கு தலா ஒரு 'டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டன. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. எஸ்.எஸ்.ஏ., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். திட்ட தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். பிரான்சை சேர்ந்த தன்னார்வலர் ஜெரால்ட் ஸ்னெனிக், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சசிகுமார், ரோட்டரி கிளப் தலைவர் சார்லஸ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். விழாவில், பிரபஞ்ச அமைதி அறக்கட்டளை அலுவலர் சித்ரா, ரோட்டரி கிளப் செயலாளர் மணி வண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

