/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி -- வினா போட்டி : அசத்திய ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி -- வினா போட்டி : அசத்திய ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி -- வினா போட்டி : அசத்திய ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி -- வினா போட்டி : அசத்திய ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள்
ADDED : டிச 18, 2025 07:08 AM

கூடலுார்: 'தினமலர்' நாளிதழின் மாணவர் 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி -வினா போட்டியில், கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடனுக்குடன் பதில்களை கூறி பரிசுகளை வென்றனர்.
கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனையும், வாசிப்பு ஆர்வத்தையும் ஊக்குவித்து படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவு படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், வினாடி-வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வினாடி- வினா 2025--26 போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதில், பள்ளி அளவில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் வினாடி - வினா, போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதி போட்டி நடத்தப்படுகிறது. போட்டியின் நிறைவாக பரிசுகள் வழங்கப் படுகிறது.
நடப்பு ஆண்டு 'தினமலர்' நாளிதழில் பட்டம் இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டியில், 'சத்யா' ஏஜென்சி மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' கரம் கோர்த்து இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றன. பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளன. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளிகள் நடந்த வினாடி-வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 40 பேர் எழுதினர்.
அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மாணவிகள், பாத்திமாரிபா, தியானா பாத்திமா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நிஷா பாப்பச்சன் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில், பள்ளியின் பட்டம் பொறுப்பாசிரியர்கள் மோகன், சுமித்ரா உடன் இருந்தனர்.

