நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலூர் : பந்தலூர் அருகே தட்டாம்பாறை பகுதியில் அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்பட்டது.
பந்தலூர் அருகே தட்டாம்பாறை பகுதியில் அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடந்தது. கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயா கட்டடத்தை திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ராதா வரவேற்றார். பொறுப்பாளர்கள் சரோஜா, பரிமளா, மினி, சரிதா, நபீசா, ஜின்சி, ஊர் பிரமுகர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.